வாடகை தராமல் 13 ஆண்டுகளாக அட்டகாசம்: திமுக வட்டச்செயலாளரை 48 மணி நேரத்தில் வெளியேற்ற நீதிபதி உத்தரவு!

வாடகை வீட்டில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்துக் கொண்டு, வாடகை செலுத்தாமல்  அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதுடன் காலி செய்ய மறுக்கும் சென்னை, தி.நகர் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்துக்குள் வெளியேற்ற மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்காக திமுக வட்டச்செயலாளர் ராமலிங்கம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் குடியேறியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வாடகை கொடுப்பது இல்லை என்றும் , தொடர்ந்து அராஜக போக்கையே ராமலிங்கம் கடைப்பிடித்து வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டின் உரிமையாளர் கிரிஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதன்படி நீதிமன்றம் ராமலிங்கத்தை வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ராமலிங்கம் பிடிவாதமாக வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கிரிஜா மீண்டும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்த வீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ராமலிங்கம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வாடகையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தி.நகர் தண்டபாணி தெருவில் சொந்த வீடு இருந்தும், தற்போதுள்ள வாடகை வீட்டை காலி செய்து கொடுக்க அவருக்கு மனமில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் கூறியபடி நடக்கவில்லை. தற்போது தனது வழக்கறிஞரை மாற்றிவிட்டார். அவர் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறார்.

எனவே இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனு தாரராக சேர்க்கிறேன். எனவே காவல் ஆணையர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திமுகவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. வாடகைக்காக வீட்டில் குடியேறி பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சி நடைபெறுவதால் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையுடன்  செயல்படுகின்றனர். இது போன்றவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் இந்தியாவை காப்பாற்ற போரேன் என்று வீண் பில்டப் செய்கிறார்.  முதலில் இவர் திமுக ரவுடிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றட்டும் என்கிறார்கள் மக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top