திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொய் பரப்புரை செய்வதா: ஸ்டாலினுக்கு, எஸ்.ஜி.சூர்யா கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியின்போது கொடுத்த 505 வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரை செய்து வருகிறார் என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுள்ளது! என நீங்கள் அறிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மக்களை ஏமாற்றும் வேலையை முதலில் தாங்கள் நிறுத்த வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் அப்பட்ட பொய்யை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்க நீங்கள் அறிவித்து நிறைவேற்றப்படாத சில வாக்குறுதிகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

> வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்

> சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

> பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்

> தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்

> குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை

> பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.

> மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24,000 ஆக உயர்வு

> பள்ளியில் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

> மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்.

> பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

> மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்

> பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.

> கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி

> வடலூரில் வள்ளலாளர் பெயரில் சர்வதேச மையம்

> திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்

> நீட் தேர்வு ரத்து

> தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு

> நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள்

> சிறு, குறு விவசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்

> கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

> ரேசன் கடைகளில் ஒரு கிலோ சக்கரை, உளுத்தம் பருப்பு கூடுதலாக வழங்கப்படும்

> பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

> மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி

> சத்துணவ, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம்

> அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட்

> நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்

> மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்

இவை எல்லாம் மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்கள் என தேர்தல் சமயத்தில் உள்ள வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டது. உங்கள் 99% என்ற கணக்குப்படி வைத்துக்கொண்டால் 505 வாக்குறுதிகளில் 499 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு 6 வாக்குறுதிகள் மட்டுமே மீதம் இருக்கும். ஆனால் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படவில்லை. உங்களுக்கு கணக்கு தெரியவில்லையா அல்லது உங்கள் நிர்வாகத்திற்கு கணக்கு தெரியவில்லையா?

தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நாங்கள் கற்றுக்கொடுக்க வருகிறோம். அதை விட்டுவிட்டு இப்படி மக்களை ஏமாற்றுவது அழகல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் நீங்கள் அதனை மறவாதீர்கள்..

உங்கள் பொய்களுக்கு மன்னிப்பு கேட்டு தயவு செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியை பாருங்கள் மாண்புமிகு முதல்வரே…
இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top