பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணத்தை போற்றும் வகையில், கட்சியின் ஆன்மிகப் பிரிவு சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்மீகப் பிரிவு தலைவர் நாச்சியப்பன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பின்னணி பாடகர் முகேஷ் இந்த பாடலை பாடிய நிலையில், பாடலுக்கு கண்ணன் இசை அமைத்துள்ளார்.
பாதயாத்திரையின் போது, தொண்டர் படை சூடிட…, மோடியை போற்றிட…, மலர்கள் தூவிட…, வாழ்த்தும் பாடிட…, தலைவர் வருகிறாரே என்ற இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது.
தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்திற்கு இந்த பாடல் மேலும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது.