படிக்காமல் அரசியலுக்கு வரும் உதயநிதிக்கு ஜனாதிபதியின் அதிகாரம் என்ன என்பதே தெரியவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, புதிய நாடாளுமன்றத்தை திறக்க சாமியர்களை கூப்பிட்டு செல்கின்றனர். அங்கு செங்கோல் நிறுவுகின்றனர். ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைத்துச்செல்ல வில்லை. மேலும் அங்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும்போது நடிகைகளை அழைத்துச்செல்ல அனுமதிக்கின்றனர். ஆனால் அதற்கும் ஜனாதிபதியை அழைக்கவில்லை என சிறுபிள்ளைத்தனமாக பேசி இருந்தார். உதயநிதியின் அபத்தப் பேச்சுக்கு
மாநில தலைவர் அண்ணாமலை சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பேசியதாவது: பாராளுமன்றத்தில் புதிய கட்டிடத்தில் அதனுடைய மையப்புள்ளியாக இருக்கக்கூடிய கட்டிடத்தில் நமது செங்கோலை கொண்டுச் சென்று வைத்துள்ளனர். அதே நேரத்தில் 33 சதவீதம் மகளிருக்கான மசோதா வெற்றிகரமாக நமது தாய்மார்கள், சகோதரிகளுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
ஆனால் உதயநிதி சொல்கிறார், நீங்கள் ஏன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யும் போது ஜனாதிபதியை கூப்பிடவில்லை என்று. என்னா அறிவு.. அவருக்கு.. ஏங்க மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றினால் அது சட்டமாக்க கையெழுத்து போடுபவர் ஜனாதிபதி. மசோதா நிறைவேற்றிய கோப்புகளை கொண்டு சென்று ஜனாதிபதி மாளிகையில் கொடுத்தால் ஜனாதிபதி அம்மா நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையெழுத்து போடுவார். அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்? எதுவுமே படிக்காமல் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் அறிவு இருக்கும்.
நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு சாமியார் எல்லாரையும் கூப்பிடுகிறார்கள்! ஆனால் ஜனாதிபதியை கூப்பிட மாட்டார்களா? ஆமாங்க செங்கோலை நிறுவுவதற்கு சாமியாரைத்தான் கூப்பிடனும். உங்களை (உதயநிதியையா) கூப்பிடுவோம். சனாதன தர்மம் வேண்டாம் என சொல்லக்கூடிய திமுகவினரை கூப்பிட்டா செங்கோலை நிறுவுவார்கள் ?
ஒரு மசோதா வெற்றியடைந்து விட்டது என்று சொன்ன பிறகு அந்த மசோதாவில் கையெழுத்து போடுபவர் ஜனாதிபதி. ஏதாவது நமது நாட்டில் ஒரு மசோதா தாக்கல் செய்யும்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறாரா? அப்படிப் பார்த்திருக்கிறோமா? உதயநிதி போன்ற அறிவாளிகளை வைத்துக்கொண்டு தமிழக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.