ஒரு லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கவராதியாக மாற்ற செயல்திட்டம் போட்டிருந்தோம் என கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளி வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022 அக்டோபர் 23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது. இதை ஒரு சாதாரண சிலிண்டர் வெடிப்பு சம்பவமாக, மடைமாற்ற திமுக அரசு செய்த முயற்சிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முன்னெடுப்பால் தோல்வி அடைந்தது நினைவு கூரத்தக்கது.
அதைத் தொடர்ந்து விசாரணை தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜமேஷா முபின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது இத்ரீஸ் (34), முகமது அசாருதீன் (27), ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்படி என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் முகமது இத்ரீஸ் அளித்துள்ள வாக்குமூலம்: ஜமேஷா முபின் வெடிகுண்டு தயாரிக்க எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள அரபி கல்லூரியை எங்கள் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம்.
இதற்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் அடிக்கடி நடத்துவோம். அங்கு துப்பாக்கிச். சுடுதல் மற்றும் பிற ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வோம். அதிலும் சமூக வலைதளத்தில் ஹிந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துடன் உள்ள இஸ்லாமிய இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதனை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.
எங்களின் இலக்குப்படி ஒரு ஆண்டில் ஒரு லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்ய வேண்டும் என்று பயணித்து வந்தோம். முதலில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. அது வெற்றி பெற்று இருந்தால், மிகப்பெரிய தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்திருப்போம். இவ்வாறு என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடந்த பயங்கரவாத தாக்குதலை, வெறும் சிலிண்டர் வெடிப்பு விபத்து எனக் கூறி தமிழர்களின் உயிரை துச்சமாக மதித்த திமுக அரசின் மீது கோவை வாழ் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுக அரசு நீடிக்கும் வரை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.