எவரும் பூணூல் அணியலாம் – பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரிய சாமி 

கடந்த அக்டோபர் 4, புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று, நடைபெற்ற திருநாளைப் போவார் நாயனார் எனப்படும் நந்தனாரின் குருபூஜையை  முன்னிட்டு தமிழக ஆளுநர் 200 பட்டியல் இனத்தவருக்கு பூணூல் அணிவித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திமுக, திக, கம்யூனிஸ்ட் காரர்கள் ஆளுநர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியலின  அணித்தலைவர் தடா பெரியசாமி, கடந்த 2019 ஆம் ஆண்டு சிதம்பரம் நந்தனார் மடத்தில் 100 பட்டியல் சமூகத்தினருக்கு தான் பூணூல் அணிவிக்கும்  விழா நடத்தியதை நினைவு கூர்ந்து, பூணூலின் மகிமையைப் பற்றிய பதிவு ஒன்றை  தனது முகநூலில் இட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: 

பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள் என மாநில பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.

நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர்.

பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறு, முற்காலத்தில் குடும்பத் தலைமை, சமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம். இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொற்கொல்லர்கள் (தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை ஓர் உரிமையாகவும் சடங்காகவும் வைத்துள்ளனர். பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும்.

இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும். அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர். மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது. வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன. சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.

அய்யன் திருவள்ளுவர் (ஞானவெட்டியான் நூலில் கூறியது)

முந்தி பிறந்தவன் நான்!
முப்புரி (பூணூல்) தரித்தவன் நான்!
சங்கு பறையன் நான்!
சாதியில் மூத்தவன் நான்!
வேதமரை ஆகமங்கள்
பிறந்தது எங்கே?
வேதாந்தம் பிறந்தது
எந்தன் பறையர்குள்ளே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top