திமுக பெண்களுக்கு மரியாதை கொடுத்த லட்சணத்தை தோலுரித்து பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெண்களின் உரிமையை போற்றும் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை பற்றி, முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது !
அரசியல் காரணங்களுக்காக ஒரு நன்மை பயக்கும் மசோதாவை பற்றி, எதிர்மறையாக பேசுவது திமுகவிற்கு புதிது அல்ல !
ஆனால் பெண்களையும் சூத்திரர்களையும், பாஜக எப்பொழுதும் இழிவான தன்மையில் அடையாளப்படுத்தும் என்று பொய்யுரை கூறியிருக்கிறார்கள் !
1977 தேர்தலில் தோற்ற பிறகு , மதுரைக்கு வந்த இந்திரா காந்தி மீது மதுரை தெற்குவாசல் – தெற்குவெளி வீதி சந்திப்பில் ஆள் உயர இரும்புத்தடிகளில் கொடிகளை சுற்றி கொலை வெறி தாக்குதல் நடத்தியது மறக்கவில்லை புரட்டொலியே
திறந்த காரில் வந்த அவரை தலையணையை வைத்து காப்பாற்றியது திரு நெடுமாறன் அவர்கள்
அந்த காட்சியை தூரத்திலிருந்து பார்த்த சாட்சியாக நானே இருந்தேன்
அதன் பின்னர், இந்திராவின்
புடவையில் சிந்திய நெடுமாறனின் ரத்தம்
அதை எப்படி எல்லாம் அவதூறாக அசிங்கமாக விமர்சித்தீர்கள் என்பதை சொல்ல நாகூசுகிறது புரட்டொலியே
ராம்நாத் கோவிந்த் அவர்களையும், திரௌபதி முர்மு அவர்களையும் இந்த பாரத தேசத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் அமர வைத்தது பாஜக !
பழங்குடியின பெண் திரௌபதி முர்முவுக்கு எதிராக ஒரு முற்படுத்தப்பட்ட பிராமண வேட்பாளரை நிறுத்திய உங்கள் கீழான செயல்பாட்டுக்கு உதாரணம் – இந்த சரித்திரத்தை மறந்து விட்டாயா புரட்டொலியே
பெண்களை அவமதிக்கும் திமுகவின் செயல்களுக்கு ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்
சட்டசபையில் பெண் என்று பாராமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை புரட்டொலியே
அதே மாதிரி காங்கிரசின் அன்றைய மந்திரி அனந்தநாயகியை “பாவாடை நாடாவை அவிழ்த்தால் தெரியும் “என்று சொல்லக் கூசும் வார்த்தையை சொல்லி கேவலப்படுத்திய சரித்திரம் இன்னும் சட்டசபை சரித்திர குறிப்பிலேயே இருக்கிறது என்பதை மறைக்கப் பார்க்கிறாய் புரட்டொலியே
பெண்களை ஆட்சியில் அதிகாரத்தில் அரியணையில் ஏற்றி அலங்காரம் செய்து வழிபட்டது பாஜக
பெண்களை ஆபாச வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி வருவது திமுக
இதை தமிழகம் உணர்ந்துள்ளது
என்ன பொய் பரப்புரைகள் செய்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்
” புரட்டு ஒலியே”
( முரசொலியே) உனக்கு எப்படி இது புரியப் போகிறது?”
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.