குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்தால் அது மீண்டும் எங்கள் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை காவிரி விவகாரம் தொடர்பாக திடீரென்று கூட்டப்பட்டது. ஆனால் விவசாயிகள் தண்ணீரின்றி வாடி வரும் நிலையில் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சில இஸ்லாமிய எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் குரலை சட்டப்பேரவையில் பதிவு செய்யவதற்காக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தோம். ஆனால் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எங்களை முழுமையாக பேசவிடவில்லை அதற்காக நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் நேற்று (அக்டோபர் 11) செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, தன்னுடைய சார்ஜ் சீட்டில் இது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
மேலும் கோவை, மத அடிப்படைய பயங்கரவாத தீவிரவாதிகளால் மீண்டும், மீண்டும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அவர்கள் இஸ்லாமியர்களுக்கான வாக்கு வங்கிக்காக செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் கோவையில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குரலாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.
ஆனால் வழக்கம்போல பேரவைத் தலைவர் அப்பாவு, நேற்று (அக்டோபர் 11) நான் குண்டு வெடிப்பு விஷயம் தொடர்பாக பேசும்போது சம்பந்தமே இல்லாமல் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் என பதில் பேசுகின்றார்.
அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டியதை எல்லாம் கூட சபாநாயகரே பதில் சொல்லி விடுகிறார். இன்றும் கூட எங்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை அதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தோம், என்றார்.
மேலும் அவர் பேசும்போது, நான் சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை கூட கொடுக்காமல் உள்ளனர். அவர்களுக்கு சாதகமானவை மட்டுமே வெளியிடுகின்றனர். மற்றவர்கள் பேசுவதை தடை செய்து விடுகின்றனர். இதுதான் திமுகவினர் ஜனநாயக முறையில் நடத்தும் சட்டப்பேரவையா? நீங்கள் மீடியாக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளை விடுவிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, கோவை மன்னிக்காது என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர் இந்து இயக்கத்தினர். திமுகவினருக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியம் கிடையாது. பயங்கரவாதிகளை விடுதலை செய்து எப்படியாவது இஸ்லாமிய மக்களின் வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. இது போன்றவர்களை கோவை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்கிறார்கள் வலைத்தளப் பதிவர்கள்.