தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு (என்.எஸ்.ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற 1986 செப்டம்பர் 22ஆம் தேதி தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) உருவாக்கப்பட்டது. தேசிய பாதுகாப்புப் படை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இப்படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் தனது பாராட்டுகளைத் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: என்.எஸ்.ஜி. வீரர்களுக்கும், தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்.
என்.எஸ்ஜி கருப்புப்பூனைப் படையினர் தங்களைத் தனித்துவமான சக்தியாக உறுதியாக நிலைநிறுத்தி, பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த சிறப்புத் தருணத்தில், படையின் அனைத்துத் துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் தங்கள் கடமையின் போது, சோர்வில்லாத தொழில்முறையையும், நம் தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றனர்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.