திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நக்சல் இயக்கத்தை ஆதரிக்கும் சிலர் பாஜகவை பற்றி தவறுதலான சுவர் விளம்பரம் செய்து வந்துள்ளனர். இதற்கு அம்மாவட்ட பாஜக சூடாக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக பற்றி அவர்கள் எழுதுவது போல் தாங்களும் ஊர் எங்கும் எழுத வேண்டி இருக்கும் என காவல்துறையிடம் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, காவல்துறையினரால் நக்சல்களின் சுவர் விளம்பரம் அழிக்கப்படுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மெல்ல, மெல்ல அழிந்து வருகின்றன. அவர்களது கொள்கைகள் பிரச்சாரங்கள் வெகுஜன மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. அக்கட்சிகளின் கொள்கைகளை பரப்பும், அவர்களின் ஆதரவாளர்களாக செயல்படும் நக்சல் பயங்கரவாத அமைப்புகளும் இந்தியாவில் துடைத்தெறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த நக்கசல் அமைப்பின் ஒரு அங்கமாக கருதப்படும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு திருவாரூர் மாவட்ட பாஜக சரியான சவுக்கடி கொடுத்தது. அண்மையில் திருவாரூரின் முக்கிய பகுதிகளில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குறித்து மோசமாக விமர்சித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்த சுவர் விளம்பரங்கள் குறித்து பாஜகவினர், துரிதமாக செயல்பட்டு அந்த விளம்பரங்களை காவல்துறை மூலம் அழிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட்டால் கடுமையான எதிர் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
இது போன்று விளம்பரம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நக்சல்களை கைது செய்ய வேண்டும். அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும்.
யார் இந்த மக்கள் அதிகாரம்?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவாளர்களாக செயல்படும் இந்த அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்தோ தங்களது கொள்கைகள் குறித்தோ சுவர் விளம்பரங்கள் செய்ய மாட்டார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விமர்சித்து சுவர் விளம்பரங்கள் செய்து அதன் மூலம் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டுவர்.
இந்த அமைப்பினர் எப்படி செயல்படுவார் என்பதற்கு சரியான உதாரணம் கோவன். அதிமுக ஆட்சியில் இருக்கின்ற வரையில் மதுவுக்கு எதிராக ஆடி, பாடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த கோபன், தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் மௌனமாக உள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகத்தில் பல கலவரங்களை முன் நின்று நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தை வன்முறையாக மாற்றியதில் இந்த அமைப்பின் பங்கு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த அமைப்பு இரண்டே வேலைகளை தவறாமல் செய்கிறது. ஒன்று பேருந்து பேருந்தாக ஏறி உண்டியல் குலுக்கி மக்களிடம் பணம் வசூலிப்பது. மற்றொன்று பேருந்துகளில் ஏறி பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஆகிய வேலைகளை செய்து வருகிறது.
கடந்த காலங்களில் இந்த அமைப்பின் பொய் பிரச்சாரங்களை மக்கள் அமைதியாக கேட்டு வந்தனர். ஆனால் தற்போது பேருந்துகளில் பேசும்போது அங்கு வைத்தே அவர்களுக்கு பதிலடி தரப்படுகிறது. பேருந்துகளை விட்டு இறக்கி விடப்படுகின்றனர். இதனால் நேரடியாக பிரச்சாரம் செய்வதை குறைத்து இதுபோன்ற நஞ்சை பரப்புவதில் அந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியது போல, பதிலுக்கு பாஜகவினரும் கம்யூனிஸ்டுகள், திமுகவை குறித்து விமர்சித்து எழுதினால் ஏற்றுக் கொள்வார்களா? இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.