கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு 279 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 1.01 கோடி ரூபாய் மதிப்பில் தரைதளம், முதல் தளத்தில் தலா மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன.
கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை பிரவீன் என்பவர் டெண்டர் எடுக்க, கற்பக விநாயகா என்ற நிறுவனம் கட்டுமான பணியை செய்தது. இந்த நிறுவனத்தை ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷிற்கு நெருக்கமானவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமான பணி நடந்த போது கட்டுமானத்தில் தரமில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து பணிகள் முடிந்து கடந்த மாதம் செப்டம்பர் 26ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதன் பின் கடந்த 3ம் தேதியும், நேற்று (அக்டோபர் 18) காலையிலும் பள்ளி கூரையின் சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்தது. இதில் மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதல்வர் திறந்த 20 நாளிலேயே இரண்டு முறை பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து ஓசூர் பி.டி.ஓ., சீனிவாசமூர்த்தி, உதவி பொறியாளர் மாது ஆகியோர் ஆய்வு செய்தனர். விழுந்த சிமெண்ட் பூச்சுகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் இந்தக் கட்டிடம் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை எனவும் உடனடியாக கட்டிடத்தை இடித்துவிட்டு நல்ல தரமான முறையில் கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை, பள்ளி, குழந்தைகள், அவர்கள் உயிர் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை ..எங்கும் ஊழம், எதிலும் ஊழல் என்பதே கொள்கை!