நகர மையங்களில் புதிதாக 5,000 குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கம் தொடங்கும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று (அக்டோபர் 19) டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது பெண்கள் தலைமைத்துவத்திற்கான சி.ஐ.ஐ. மையத்தை அவர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து
அவர் பேசியதாவது:
பெண்கள் வீடு மற்றும் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலை செய்வதற்காக பொருளாதார அர்த்தமுள்ள போட்டி வாய்ப்புகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். தொழில்துறை தலைமை இதற்கான முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ‘‘அடுத்த வாரத்திற்குள் நகர மையங்களில் 5,000 குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கம் தொடங்கும்’’ என்று கூறியுள்ளார்.
இது வேலை தேடிச் செல்லும் பெண்கள் மற்றும் படிக்கச் செல்லும் மாணவிகள் காப்பகங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற ஒரு படிக்கல்லாக அமையும், என்று தெரிவித்துள்ளார்.