கடந்த 20.10.2023 இரவு 10 மணி அளவில் சென்னை பனையூர் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை இல்லத்து வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற முற்பட்டுள்ளது தமிழக காவல்துறை. காரணம், அந்தக் கொடிக் கம்பம் சிலருக்கு இடைஞ்சலாக இருந்தது என்றும் அதை அங்கு வைப்பதற்கு அனுமதி பெறப்பட வில்லை என்றும் கூறுகிறது காவல்துறை உண்மையில் அந்தக் கொடி கம்பத்தால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை, காரணம் அது அவரது வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி இருக்கிறது. அதே பகுதியில் பக்கத்து இடங்களில் பாஜக கொடிக் கம்பத்திற்கு சமமாக திமுக கொடி கம்பம் உட்பட பிற கட்சிகளின் கொடி கம்பங்கள் இருக்கின்றன…ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை…பாஜக கொடியை அகற்ற 300 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள்…
தகவல் அறிந்து இரவு என்றும் பார்க்காமல் திரண்டனர் பாஜகவின் ஆண் பெண் உறுப்பினர்கள் பலர் …. கொடிக்கம்பத்தை எடுத்து ஆக வேண்டும் என காவல்துறைக்கு கட்டளையிட திரண்டனர் அருகில் இருந்த மசூதில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் …இவர்கள் தான் கொடி கம்பம் பற்றி புகார் கொடுத்தவர்கள்!
காவல்துறையை வசை பாடிய அவர்களை கைது செய்யாமல், வழக்கு தொடராமல் அன்போடு அரவணைத்து அருகில் இருந்த மசூதிக்குள் அனுப்பி விட்ட காவல்துறை, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் பெண் உறுப்பினர்கள் ஆண் காவல்துறையினரால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர். மாநிலச் செயலாளர் சுமதி மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். சில பெண்களுக்கு கை கால்களில் உரசல் காயங்கள்…அவர்கள் கொண்டு வைக்கப்பட்ட மண்டபத்தின் கழிப்பறை சாவிகளை எடுத்துச் சென்று விட்டிருக்கிறது காவல்துறை
ஆண் உறுப்பினர்கள் லத்தியால் அடிக்கப்பட்டுள்ளார்கள் …ஐ.டி பிரிவின் மாநிலச் செயலர் விபின் பாஸ்கரின் கண்களில் அடிபட்டு ரத்தம் கொட்டத் துவங்கிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்படுகிறார். மயங்கி விழுந்த மாரிமுத்துவை மருத்துவமனையில் அனுமதிக்காமல் திட்டமிட்டு தாமதம் செய்திருக்கிறது காவல்துறை… கலைந்து சென்ற ஆண்களை முதுகில் அடித்து வீரத்தை காட்டி இருக்கிறது காவல்துறை…
இந்த நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது பற்றியும், காவல்துறையின் அத்து மீறல் பற்றியும் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
இன்றிலிருந்து நூறாவது நாள், அதே இடத்தில் கொடிக் கம்பம் – அதிரடி காட்டும் அண்ணாமலை
“குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்,
” திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்,
” அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக் கம்பங்கள் நடப்படும்,
“பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு @vivinbhaskaran அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம், ” என்று காட்டமாக, ஆனால் சவாலாக கூறியுள்ளார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.