பாஜகவினர் மீது அத்துமீறும் விடியாத திமுக அரசு: ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைப்புக்கு அண்ணாமலை வரவேற்பு!

விடியாத திமுக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் அத்துமீறல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த அக்டோபர் 22ம் தேதி இரவு உத்தரவிட்டார்.

இந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அத அறிக்கையை பாஜக மேலிடத்திடம் விரைவில் வழங்கும். இந்த 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊழல் நிறைந்த திமுக அரசின் அராஜகம் மற்றும் பகுத்தறிவற்ற நடத்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட குழுவினை விசாரணை நடத்த நமது பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் நியமித்துள்ளார்கள். தேசியத் தலைவருக்கு தமிழக பாஜக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

2021 மே மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக அரசு பாசிசப் போக்கை மட்டுமே காட்டி வருகிறது.

1. பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அற்பமான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் குற்றம்  சுமத்தப்படுகின்றன.

2. பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் திமுகவின் ஊடக செயல்பாட்டாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஊழல் திமுக அமைச்சர்களின் ஈகோவை திருப்திப்படுத்த காவல்துறைக்கு பாஜகவினரைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

3. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, 41ஏ சம்மன் அனுப்பாதது, ஜாமீன் வரும்போது புதிய அற்பமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது, வார இறுதி நாட்களில் அல்லது நீண்ட அரசு விடுமுறைக்கு முன் அவர்களை கைது செய்வது, இவை இந்தக் கொடூர திமுக அரசின் செயல்பாடாகும்.

4. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. ஆனால் பாஜக தமிழ்நாடு தாக்கல் செய்யும் உண்மையான புகார்களை புறந்தள்ளிவிடுகிறது.

கடந்த 30 மாதங்களில் திமுகவின் இந்த அரசாங்கத்தின் அத்துமீறல்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் இந்தக் குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top