தமிழகத்தில் பண்டிகைக் காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலான பணத்தை பயணிகளிடம் இருந்து பெற்றுள்ளது. இதனை விடியாத திமுக அரசு கண்டும், காணாமல் இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கட்டுப்படுத்த, உரிய விதிமுறைகளை திமுக அரசு வகுக்கவில்லை. இதன் காரணமாக கூட்டத்தைப் பொறுத்து பேருந்து உரிமையாளர்கள் தங்களது இஷ்டத்துக்குக் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்.
வழக்கமாக வாங்கப்படும் கட்டணத்தை விட, வார இறுதி நாட்களில், 20 – 30 சதவீதம் கட்டணத்தை உயர்த்துவது ஆண்டு முழுவதும் நடக்கும் வாடிக்கை. ஆனால் ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைப்பதே கட்டணமாக உள்ளது.
இதனால் ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காமல் அவதிப்படும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறு வழியின்றி அதிகமான கட்டணம் கொடுத்து இது போன்ற பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு ஆம்னி பேருந்தில் ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படுகிறதோ, அதே கட்டணத்தையே ஆண்டு முழுவதும் வசூலிக்க வேண்டும். ஆனால் கூட்டத்தைப் பொருத்து கட்டணத்தை உயர்த்தினாலும் போக்குவரத்துத்துறையினர் கண்டு கொள்வதே இல்லை என்ற புகார் உள்ளது.
இந்த நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 20ம் தேதியில் இருந்து சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பல லட்சம் மக்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ரயில், அரசு பேருந்துகள் எதிலும் இடம் கிடைக்காத நிலையில் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தபோது வழக்கத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சமீபத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு திமுக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் கூட்டம் நடத்தி அறிவுறுத்தியும், கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை. இதுபற்றி ஏராளமான புகார்களை மக்கள் தெரிவித்தனர். ஆனால் பெயரளவில் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டண விபரங்களைச் சேகரித்ததில், அப்பட்டமான கட்டண விதிமீறல் நடந்தது தெரியவந்தது.
அதேபோன்று பேருந்துகளில் நிறைய விதிமீறல்களும் இருந்தன. கடந்த 18ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரையிலான நான்கு நாட்களில், 8,635 பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில், 1,545 பேருந்துகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மொத்தம் 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மேலும் 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருந்தபோதும் நேற்று (அக்டோபர் 24) வரை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம், அசுர வேகம் போன்ற எந்த விதிமீறலும் குறையவில்லை. விடுமுறைக்கு வந்த பல லட்சம் மக்கள் திரும்பவும் தங்கள் பணிக்குத் திரும்பும் போதும் இதே கட்டணக் கொள்ளைக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள கட்டண விவரம் சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு, திருச்சிக்கு ரூ.1,610 முதல் 2,430 ரூபாயும், கோயம்புத்தூர் ரூ.2,050 முதல் ரூ.3,310, மதுரை ரூ.1,930 முதல் ரூ.3,070, திருநெல்வேலி ரூ.2,380 முதல் ரூ.3,920, தூத்துக்குடி ரூ.2,320 முதல் ரூ.3,810, நாகர்கோயில் ரூ.2,610 முதல் ரூ.4,340, சேலம் ரூ.1,650 முதல் ரூ.2,500, தஞ்சாவூர் ரூ.1,650 முதல் ரூ.2,500 இதில் குறைந்தபட்ச கட்டணம் என்பது குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கான கட்டணம், அதிகபட்ச கட்டணம் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளுக்கான கட்டணம் என கூறப்பட்டது. இதுவே மிகமிக அதிகம் என்ற நிலையில் இந்தக் கட்டணத்தையும் தாண்டி பல பேருந்துகளில் அதிகம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வந்தே பாரத் ரயில் கட்டணத்தை விமர்சித்த கம்யூனிஸ்ட் திமுக யோக்கியவாங்கள், விமானம் டிக்கெட் அளவில் வசூல் சுதஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்கை பற்றி வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.