சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத், பிஎப்ஐ இயக்கத்திற்கும் தொடர்புடையவர் என்பது பிரச்சனையை மேலும் தீவிரமடையச் செய்வதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத், பிஎப்ஐ யோடு தொடர்புடையவர் என்பது பிரச்சனையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. ஆனால் சட்ட அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு மேலும் கவலையளிக்கிறது. திமுக அமைச்சர்கள், தலைவர்கள் ஆளுநர் மீது நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் இதற்குக் காரணமா? என சிந்திக்க வேண்டியுள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.