24 மாதங்கள் ஆகி விட்டது புளியங்குடியில் விசுவ ஹிந்து பரிஷத் நகர தலைவர் அழகு அவர்களின் மரக்கடையை பயங்கரவாதிகள் எரித்து நாசமாக்கி.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விசுவ ஹிந்து பரிஷத் நகர தலைவர் அழகு அவர்கள் தன் மாமாவோடு இணைந்து மரக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அந்த பகுதியில் 2021ஆம் வருடம் இதே மாதம் சில நாட்கள் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் நகர அலுவலகம் திறந்தார் அழகு. மிக விமரிசையாக அந்த அலுவலகம் திறக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரவாதிகள் 27/10/ 2021 அன்று அதிகாலை அவரின் மரக்கடை தீ வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தேக்கு, மா, பலா போன்ற மர பொருட்களையும் பிரம்மாண்டமான ஷெட்டுகளும் நாசப்படுத்தினர்.
இந்த சம்பவம் நடந்து இதுவரை 24 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் தென்காசி மாவட்ட காவல்துறை துரும்பை கூட கிள்ளி போடவில்லை. தென்காசி மாவட்ட காவல்துறை விசாரணை குழு ஒன்றை அமைத்தது, ஆனால் சில நாட்களிலேயே அந்த குழு வேறு காரணங்களுக்காக பிரிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல்துறையால் இந்த சம்பவத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் கண்டு பிடிக்காமல் இருக்கிறதா ? இது வரை இரண்டு காவல் கண்காணிப்பாளர்கள் மாறி விட்டனர். மத்திய அமைச்சர் எல் முருகன் இதனை தொடர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரிடம் இ மாவட்ட எஸ்.பி., நாங்கள் இந்த வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறி வருகிறார். ஆனால் இன்று வரை ஒப்படைக்கவில்லை, வேறு நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இந்த வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க எந்த சக்தி தடுக்கிறது என்பதை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெளிவு படித்த வேண்டும். யாரைக் காப்பாற்ற தென்காசி மாவட்ட காவல்துறை செயல்படுகிறது எனக் கூற வேண்டும்.
அச்சங்குட்டம் பள்ளிக்கூட விவகாரத்தில் பாய்ந்து, பாய்ந்து ஹிந்துக்களை கைது செய்யும் தென்காசி காவல்துறை, எதனால் இந்த வழக்கில் சிறு துரும்பை கூட கிள்ள மறுக்கிறது என வெளிப்படையாகக் கூற வேண்டும்.
வழக்கில் பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க இயலாவிட்டால் வழக்கை வேறு விசாரணை அமைப்புகளிடம் கொடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை வெளியேற வேண்டும் என ஹிந்துக்கள் எதிர்பார்க்கின்றனர்
ஹிந்துக்களின் பரந்த மனப்பான்மையை காவல்துறை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, விரைவில் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க தென்காசி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து வியாபாரிகளும், மக்களும் குரல் கொடுக்கின்றனர்.