மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!

மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை அந்நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்தது. இதனையடுத்து கைதான 12 மீனவர்களை மீட்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இப்பகுதியின் 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக சென்றனர்.

கடந்த அக்டோபம் 23ம் தேதி அவர்கள் மாலத்தீவு கடல் பகுதி வழியே தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது மாலத்தீவு கடலோர காவல் படையினர் தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதி நாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 மீனவர்களையும் கைது செய்து அவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

இது பற்றிய செய்தி அறிந்ததும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 12 தூத்துக்குடி மீனவர்களையும், படகையும் பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அக்கடிதத்தில்  கோரியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top