பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கோவா முதல்வர், பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று தெய்வத்திருமகனாரை வணங்கினோம்.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள், பட்டியல் சமுதாய மக்களும் சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர்.

அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் மாபெரும் புரட்சி செய்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top