தாய்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது.
இந்த நிலையில், இந்தியர்கள் தாய்லாந்து வருவதற்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. ஆசியா கண்டத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான நாடுதான் தாய்லாந்து. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்கு இந்த நாடு மிகவும் பிரபலம். நிலப்பரப்பின் அடிப்படையில் தாய்லாந்து உலகின் 50 வது மிகப்பெரிய நாடு. இதனுடைய எல்லை நாடுகளாக மியான்மார், சியாம், கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உள்ளது.
தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல சுற்றுலா பயணிகள் மற்றும் சினிமா பட ஷூட்டிங்கிற்கும் செல்கின்றனர்.
இதில், தாய்லாந்து நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையில்லை என்றும் அடுத்த மாதம் 10 முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை நீக்கப்படுகிறது.
அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இலங்கை அரசு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது தாய்லாந்து அரசும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.