பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லை எனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 12 திமுக ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடந்த அக்டோபர் 30ம் தேதி கடும் தாக்குதலை நடத்தியது திமுக ரவுடி கும்பல். இந்த சம்பவம் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது பற்றி அவர் நேற்று (அக்டோபர் 31) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் அண்ணன் கருப்பு முருகானந்தம் தலைமையில், நவம்பர் 3ஆம் தேதி பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தலைவர் அறிவிப்பு வெளியிட்ட உடனே விடியாத திமுக அரசு தற்போது 12 திமுக ரவுடிக்கும்பலை கைது செய்துள்ளது. இன்னும் அமைச்சரின் உதவியாளர் உட்பட பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்ற திமுக ரவுடிக்கும்பல் திருந்துவார்கள்.