மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று (நவம்பர் 1) தமிழக மக்கள் அனைவருக்கும் பாஜக சார்பாக தெரிவித்துக்கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மானிலமெங்கும் உள்ள 8 கோட்டங்களில் இன்று தமிழ் நாடு தினம் கொண்டாடுகிறது. கோட்டத்திற்கு இரண்டு தேசிய எண்ணம் கொண்ட தமிழ் இலக்கிய சான்றோருக்கு ” தமிழர் தந்தை ஐயா மபொசி ” விருதும் வழங்கி சிறப்பிக்கிறது. பிற அரசியல் காட்சிகள் தமிழ்நாடு தினம் கொண்டாட தயங்கி வரும் இவ்வேளையில் தமிழக பாஜக வின் இந்த முன்னெடுப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது…