கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று தான் மழை பெய்யத் துவங்கியது. அவ்வாறு துவங்கிய சில மணி நேரங்களிலேயே அநேகமாக அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையில் இன்று (நவம்பர் 3) மழை பெய்யத் துவங்கியுள்ளது. சில மணி நேரங்களிலேயே வெளுத்து வாங்கிய மழையால் சாலைகள் ஆறுகள் போல் ஓடின. மழைநீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் பல இடங்களில் தண்ணீர் வாகனத்தை மூழ்கடிக்கும் அளவிற்குச் சென்றது.
சென்னை மடிப்பாக்கம், துரைப்பாக்கம், விமான நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அம்பத்தூர், பாடி, முகப்பேர், வில்லிவாக்கம், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு என சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஒரு சில நாட்கள் முன் ஊடகங்களில் பேசும்போது, மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காது. வடிகால் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது என்ற தகவலை கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது பொய் என இன்று பெய்த மழை நிரூபித்துள்ளது. வானத்து மழையை பெய் எனப் பெய்யும் மழை என்றால் திமுகவின் வாக்குறுதிகளை பொய் எனப் பொய்யும் ஏமாற்று என்கிறார்கள் மக்கள்.