சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடியாத திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் எடுத்த நடவடிக்கையால் மழைநீரால் யாருமே பாதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் விடியவிடிய கனமழை பெய்தது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக் பில்லர், கோயம்பேடு, போரூர், தி.நகர், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, புறநகர்ப் பகுதிகளான மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விடியாத திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் சாலை, ராயப்பேட்டை ஜிபி சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் நேற்று (நவம்பர் 3) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மழைநீர் தேங்கியதால், சென்னை வாசிகள் படும் அவஸ்தையை சற்றும் கண்டுகொள்ளாதது போல, இன்று அவர் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று எப்படி ஒரு பொய்யான தகவலை பரப்புகிறார் என்று தெரியவில்லை. சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி உள்ளது. 876 கி.மீ. வடிகால் அமைத்திருந்தால் ஏன் மழை நீர் தேங்குகிறது.. எதற்காக பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என்றே தெரியவில்லை.
சென்னையில் மழை பெய்தது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கின்றனர் பொது மக்கள்
இவரது பதிவுக்கு கீழே சென்னை வாசிகள் பலரும் மழை பெய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.