பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பாஜக ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது பெரம்பலூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவரும், கவுல்பாளையம் பாஜக ஊராட்சி தலைவருமான கலைச்செல்வன், அவரது தம்பி முருகேசன், பாஜக நிர்வாகி முருகேசன் ஆகிய மூவரும் கடந்த அக்டோபம் 30ம் தேதி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிக்கச் சென்றனர்.
அப்போது திமுக அமைச்சர் சிவசங்கர் பி.ஏ. மகேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் பி.ஏ., சிவசங்கர், திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், திமுக நிர்வாகி கோபி உள்ளிட்ட திமுகவினர் ஜாதி பெயரை சொல்லி திட்டியும் சரமாரியாக அடித்து துன்புறுத்தினர். அப்போது கனிமவள துறை அலுவலர்கள், போலீசாரும் தாக்குதலுக்குள்ளாகினர்.
இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தங்களை தாக்கிய திமுகவினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு, பெரம்பலூர் போலீசில் நவம்பர் 2ம் தேதி கலைச்செல்வன் புகார் அளித்தார். ஆனாலும் ஆளும் அவர்கள் மீது வழக்கு பதியாமல் போலீசார் தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை கைது செய்ய வேண்டி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார். இந்த எச்சரிக்கைக்கு பயந்து தற்போது கலைச்செல்வன் உட்பட பாதிக்கப்பட்ட மூவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள ஆறு பேர் உள்ளிட்ட 19 பேர் மற்றும் பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பிற பிரிவுகளில், நேற்று (நவம்பர் 6) வழக்கு பதிவு செய்தனர். 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குப்பதிவு செய்வது மட்டும் போதாது. அந்த ரவுடிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் திமுக ரவுடிக்கும்பலுக்கு ஒரு பயம் வரும் என்கின்றனர் பொது மக்கள்.