ஈ.வெ.ரா. திமுகவையும் காங்கிரஸையும் கம்யூனிஸ்டுகளையும் பற்றி சொன்ன கருத்துக்களை அக்கட்சியின் அலுவலகங்கள் முன்பு வைக்க தயாரா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக அலுவலகத்திற்கு வந்திருந்த பத்திரிக்கையாளர் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவிக்கிறோம். தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள் உள்ள நிலையில் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
என் மண் என் மக்கள் யாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கி இன்றைக்கு 103 தொகுதிகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். கடைசியாக நேற்று (நவம்பர் 8) திருச்சியில் முடித்துவிட்டு தீபாவளிக்காக 5 நாட்கள் விடுப்பு எடுக்கப்பட்டு மீண்டும் வருகின்ற நவம்பர் 15ம் தேதி அரியலூரில் இருந்து யாத்திரை நடத்த இருக்கிறோம்.
இந்த யாத்திரையில் மக்களின் எழுச்சி அமோகமாக உள்ளது. எந்த கட்சியையும் சாராத சாதாரண பொதுமக்கள் யாத்திரையில் பங்கெடுத்து பாஜகவுக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்னைகள் பற்றி யாத்திரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
இன்னும் 131 தொகுதிகள் உள்ளன, ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பின்னர் நாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் சமூக அநீதி தொடர்ந்து நடைபெறுகிறது. யாத்திரை திருநெல்வேலியில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. நாங்குநேரியில் ஒரு சமூகத்தை சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவனை அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஒரு ஜாதியை வைத்து நடத்தப்பட்ட ஒரு சமூக அவலத்தை நாம் பார்த்தோம்.
அதே போல வேங்கைவயல் பகுதிக்கு யாத்திரை சென்றபோது அங்குள்ள மக்கள் கேள்வி கேட்கிறார்கள். கிட்டத்தட்ட 300 நாட்கள் ஆகியும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. இதுவரை அதற்கு யாரும் கைது செய்யப்படவில்லை. என்ன சமூக நீதியை பற்றி திமுகவினர் பேசுகின்றனர். அதை தாண்டி பெரம்பலூரில் பார்த்தோம் ஆனால் நமது கட்சியை சார்ந்தவர்கள் டெண்டருக்கு போகும்போது சட்டையை கழட்டி அவரை திமுகவினர் அடித்தனர். அவர்கள் பட்டியல் சமூகத்தினர் ஆவார்கள். அதுவும் மாவட்ட ஆட்சியர் முன்பு இவை நடந்துள்ளது. ஆனால் எஸ்.சி. ஆக்ட் படி வழக்கு பதிவு செய்யவில்லை.
திமுக ஆட்சியில் தொடர்ந்து பட்டியலினத்தவருக்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது. இதே போன்று தமிழகம் முழுவதும் பட்டியலினத்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த அவலங்களை பத்திரிகையாளர்கள் உங்கள் முன் வைக்கிறேன்.
திமுக ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் இல்லை. தண்ணீர் பிரச்சனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய பிரச்னையாக மாறும்.
திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்ய ஊழல் அதிகரித்து வருகிறது. ஊழல், விவசாயம், சமூக அநீதி இந்த மூன்று அவலங்களையும் மக்கள் முன் தொடர்ந்து வைத்து வருகிறோம்.
ஈவேராவை பாஜக அவமதிக்கவில்லை, ஈவேரா சிலையை பொது இடத்தில் வைத்து போற்றி கொள்ளட்டும். கோயில் முன் வைக்க கூடாது. பொது இடத்தில் ஈவேரா கருத்துக்கள் இருக்கலாம். கோயில் முன் ஈவேரா சிலை இருக்கக் கூடாது. ஈவேரா சிலைகள் அகற்றப்பட்டு எங்கு வைக்கப்பட வேண்டுமோ அங்கு வைக்கப்பட்டு உரிய மரியாதை வழங்கப்படும்.
ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள ஈவேரா சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜக வின் தேர்தல் வாக்குறுதி.
ஈ.வெ.ரா., திமுகவையும், காங்கிரசையும் பற்றி கூறிய கருத்துக்களை அந்த கட்சி அலுவலகங்கள் முன் வைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அடுத்தவன் கால நக்கி பிழைக்கிறவன் கம்யூனிஸ்ட் என்றார் பெரியார். அதை கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் வாசல்ல வைப்பாங்களா வைப்பாங்களா ?
அழிக்கப்பட வேண்டிய கட்சி காங்கிரஸ் என்றார் பெரியார். அதை காங்கிரஸ் கட்சி ஆபீஸ் வாசல்ல வைப்பாங்களா ?
பொண்டாட்டிய கூட்டிவிட்டு பிழைக்கிறவன் திமுக காரன் என்றார் பெரியார். அதை திமுக கட்சி ஆபீஸ் வாசல்ல வைப்பாங்களா ?
எது எதை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும். அதென்ன கோயில் வாசல்ல மட்டும் அவர் சொன்னத வைக்கறது ?
மதசார்பற்ற நாட்டுல, கோயில் வாசல்ல மட்டும் ஏன் வைக்கிறீங்க
சர்ச் வாசல்ல, மசூதி வாசலில் வைக்க வேண்டியதுதானே ? திமுக இந்துக்கள் விஷயத்தில் ஒரு தலை பட்சமாக நடக்கிறது…
இந்து அறநிலைத்துறை இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் என்னிடம் உள்ளது. அதை பாஜக செயல்படுத்தும். ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவோடு கட்டாயமாக மீட்க வேண்டும் என்ற நிலை உருவாகி வந்த போது தான் மீட்டுள்ளார்கள். இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.
7லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன், வாங்கிய கடனை எப்படி கட்டுவது குறித்த அறிக்கையை திமுக வெளியிடவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் கண்டிப்பாக கடன் வாங்கும்.
பஞ்சாப் மாநிலத்திற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் என்ன பிரச்சனை வந்ததோ! அதே பிரச்சனை தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரும்.
கடன் அதிகமாக இருக்கும் போது மீண்டும் கடன் வாங்கினால் அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இது குறித்து யாருமே பேசுவதில்லை. கடன் மூலம் தமிழகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும்.
ஏனென்றால் தமிழக அரசிடம் இது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லை, டாஸ்மார்க் கடைகளில் 42 ஆயிரம் கோடி இந்த ஆண்டு வருமானம், அடுத்த ஆண்டு 52 ஆயிரம் கோடியாக மாற்றுவது குறித்து தமிழக அரசு சிந்திக்கிறது ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு உள்ளது.
அமல் பிரசாத் ரெட்டி போல் பாஜக நிர்வாகிகள் நிறைய பேர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜகவின் மீது 409 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத வழக்குகளை திமுக ஐடி விங் நிர்வாகிகள் போட்டது. கைது செய்த பாஜக நிர்வாகியை எப்படி எல்லாம் துன்பப்படுத்தலாம் என்று திமுக சிந்திக்கிறது. திராவிடம் மாடல் ஆட்சி சமூக நீதி இல்லை எனத் தெரிவித்தார்.