திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா துவங்குகிறது. 23ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், 26ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், 2,668 அடி உயர மலை உச்சியில் மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், கோவிலில் அமைந்துள்ள 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி தீயணைப்பு வாகனம் மூலம் மேற்கு கோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் வேகத்தின் அழுத்தம் தாங்காமல் சிற்பங்கள் உடைந்து சேதமாகின்றன.
சிற்பங்கள் உடையாமல் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் இல்லையெனில் பணியை நிறுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது நிதானமாக செய்ய வேண்டும் என்று விடியாத அரசுக்கு தெரியாதா? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு வகையில் இதுவும் இந்து கோயில்கள் மீதான தாக்குதலே என்கின்றனர் திராவிட மாடல் அரசின் இந்து வெறுப்பு செயல்பாடுகளை அறிந்தவர்கள்