திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 7 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்திற்கு எதிராக நாளை (நவம்பர் 18) மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அறிவித்த நிலையில், இன்று (நவம்பர் 17) முதல்வர் ஸ்டாலின் அந்த சட்டத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்திற்கு எதிராக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய (நவம்பர் 18) தினம் தமிழக பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தலைவரின் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கைக்கு பயந்து இன்று முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை எச்சரிப்பதும் விடியல் அரசு பயந்து பின்வாங்குவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆனாலும் ஜம்பமாக முழங்குவதை மட்டும் நிறுத்துவதில்லை, என்கிறார்கள் அண்ணாமலை ரசிகர்கள்…
எல்லா தரப்பிலிருந்தும், அண்ணாமலைக்கு அதிகரித்து வரும் ஆதரவு, முதல்வர் ஸ்டாலின் தூங்க முடியாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாம்!
தூங்க விடுங்க அண்ணாமலை என்று விரைவில் ஹேஷ்டாக் வந்தாலும் வரும் என்கிறார்கள் பாஜகவினர்…