தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறு பேசிய புகாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசும் போது, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க., புகார் அளித்தது.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் அவதூறு பேச்சு பற்றி விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் (நவம்பர் 25) சனிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டு உள்ளதை தேர்தல் ஆணையம் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் காங்கிரஸ் கட்சியினர் என்ன பேசுவது என்றே தெரியாமல் பாஜக தலைவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். இது போன்றவர்களுக்கு தேர்தல் மூலம் மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை.