108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையாந்து, பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம். அங்கு வரும் உண்டியல் பணத்தை தற்போது மாற்று மதத்திற்கு வாரி வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சரவண கார்த்திக் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஹிந்து அல்லாதோருக்கு கடைகளோ, நிலங்களோ வாடகைக்கோ குத்தகைக்கோ கொடுக்க முடியாது. அதுபோலவே திருக்கோவிலுக்குள் பணி செய்யவும் அனுமதி அளிக்க முடியாது.
ஆனால் இன்று கைசிக ஏகாதசியையொட்டி கிளி மண்டபம் மற்றும் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் மின் விளக்குகள், சீரியல் செட்கள் போடப்பட்டுள்ளன.
இந்த உரிமமானது திருச்சி பால்பண்ணை அருகே செயல்படும் எஸ்.பி.எம். கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது, இந்த கம்பெனியை நடத்தி வருபவர் பீர்முகம்மது என்கின்ற இஸ்லாமியர். மாற்று மதத்தவருக்கு திருக்கோயிலுக்குள் வேலை வழங்கக் கூடாது,
மாற்று மதத்தினர் திருக்கோலிலுக்குள் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வரக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது, திருக்கோவிலின் கொடி மரம் தாண்டி பிரதான இடமான கிளி மண்டபத்திற்கு சென்று மின் அலங்காரம் செய்ய இவருக்குப் அறங்கெட்ட அறநிலைத்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் தெரியாத இவர்கள் எப்படி திருக்கோவிலை காப்பாற்றுவார்கள். இந்த சீர்கேடான பணிக்கு துணை போனது யார் என கண்டறிந்து அவர்களை இந்து சமய அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
திருக்கோவிலின் நிர்வாக அலுவலரை வன்மையாக கண்டிப்பதோடு அவரை திருக்கோவில் பணியிலிருந்து மாற்ற வேண்டும்.
ஹிந்துக்களின் உண்டியல் பணம், ஹிந்துக்களுக்கு மட்டுமே… மேலும் யாராக இருந்தாலும் மாற்று மதத்தினரை பணி செய்ய திருக்கோலிலுக்குள் அனுமதியளிக்க கூடாது…
வேலியே பயிரை மேய்கிறது…. வேடிக்கை பார்க்கும் ஹிந்துவே எப்பொழுது குரல் கொடுக்க வரப்போகிறாய்… இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.