தமிழக மக்கள் நலன்களுக்காக வேளாங்கண்ணி மாதாவிடம் பிரார்த்தனை செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய தினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்துக்குச் சென்று, மாதாவைத் தரிசித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேவாலயத் தந்தை அவர்களிடம் உரையாடும்போது, உத்தரகாண்ட் மாநிலச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட, வேளாங்கண்ணி தேவாலயத்தில், சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியிருப்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன்.
பல நூற்றாண்டுகள் தொன்மையான வேளாங்கண்ணி ஆலயம், மத வேறுபாடுகள் இல்லாது அனைவரும் வழிபடும் தேவாலயமாக இருப்பது தமிழகத்துக்கே பெருமை. தமிழக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மாதாவிடம் பிரார்த்தித்துக் கொண்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.