தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் இந்து கடவுள் தன்வந்திரி மற்றும் பாரத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை அதன் புராதனப் பெயரான பாரத் என அழைப்பது தொடர்பான பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே பாரத் பெயர் பாரம்பரியமாகவே நமது அரசிதழில் உள்ளது.
இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையாக அசோகத் தூணில் உள்ள நான்கு தலை சிங்கம் இருந்து வந்தது. தற்போது இந்து மதத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரியின் படம் இலச்சினையாக இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலச்சினை மாற்றத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.