கொரோனா காலத்தில் பல கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு விரைவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என தமிழக பா.ஜ.க., தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று (டிசம்பர் 1) அரசு மருத்துவர் சுரேஷ் குமார் தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை காப்பாத்துவதற்காக இருபது லட்சம் ரூபாய் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் லஞ்சப்பணம் அளித்த அரசு மருத்துவர் சுரேஷ் குமார் மீது ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
திமுக தொண்டரான சுரேஷ் பாபு அரசு மருத்துவராக இருந்து கொண்டே, அரசு விதிகளுக்கு எதிராக திண்டுக்கல்லின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
கோவிட் காலத்தில் பல கோடிகள் முறைகேடாக சம்பாதித்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவே ₹50 லட்சம் லஞ்சமாக பேசி அதில் முதல் தவணையாக ₹20 லட்சம் ஒரு மாதம் முன்னதாக கொடுத்துள்ளார்.
இரண்டாவது தவணையாக ₹20 லட்சம் கொடுக்கும் பொழுது அமலாக்கதுறை அதிகாரியை மாட்டிவிட்டுள்ளார்.
அமலாக்கதுறையின் அதிகாரி லஞ்சம் வாங்கியதால் மட்டுமே சுரேஷ் பாபு உத்தமனாக முடியாது, நிலுவையில் இருக்கும் வழக்கிற்காக அமலாக்கதுறையால் விரைவில் கைது செய்யபடுவார். இவ்வாறு செல்வக்குமார் குறிப்பிட்டுள்ளார்.