சென்னை நகருக்குள் சாலையை மறித்து கார் பந்தயம் நடத்துவது அவசியமா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்: நன்றாக உள்ள சாலைகளை உடைத்து கார் பந்தயத்திற்காக புதிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் பரபரப்பான சென்னை நகருக்குள் சாலையை மறித்து கார் பந்தயம் அவசியமா? நிதி நிலைமை மோசமாக உள்ளதாக கூறும் அரசு தனியார் கார் பந்தயத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்க அவசியம் என்ன?. சென்னைக்கு பதில் இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயத்தை தமிழக அரசு நடத்த வேண்டும்.
சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஐந்தாவது முறையாகவும், தெலங்கானாவில் முதல் முறையாகவும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க., ஆட்சி அமைக்கும். மிசோரமில் கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.