சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த தருணங்களில் பலர் உணவுகள் இன்றி சிரமப்படக்கூடாது என்பதற்காக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலால், பல்வேறு இடங்களில் உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர் பாஜகவினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகர், மைலாப்பூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மோடி கிச்சன் மூலமாக உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
தயார் செய்யப்பட்ட உணவுகளை பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட பல்வேறு காரியகர்த்தாக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து வழங்கி வருகின்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்காக தொடர்ந்து பல இடங்களில் பா.ஜ.க.வினர் உணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் புகைப்படங்களை மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் ஷேர் செய்துள்ளார்.