சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘மோடிகிச்சன்’ மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பாஜக சார்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தால் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கண்ணீருடன் காட்சி அளிக்கும் நிலைக்கு இந்த விடியாத திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. சிங்காரச் சென்னைக்கு என்று ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடியை என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ஒவ்வொரு பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து களத்தில் பாஜக காரியகர்த்தர்கள் இறங்கியுள்ளனர்.
அதன்படி, பாஜக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக் கப்பட்டு, உணவு தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் ‘மோடி கிச்சன்’ திட்டம் மூலம் பாஜக சார்பில் சமைத்த உணவுகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், நீலாங்கரை, மடிப்பாக்கம், அம்பத்தூர், சோளிங்கநல்லூர் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைத்து பாஜகவினர் உணவு, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.