மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும்நிலையில், பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அவசரகால உதவி எண்கள் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நிலையில், மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த புயல் காரணமாக நேற்று (டிசம்பர் 3) இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரப்பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. பல குடியிருப்புகள் உள்ளே மழை தண்ணீர் புகுந்ததால் பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் எளிதாக தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்காக பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அவசரகால உதவி எண்களை அறிவித்துள்ளார். 8925818859, 9150021836, 9150021838 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.