‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படும் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார்.
இந்த நிலையில், அவரது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்;
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
தலைசிறந்த தேசியவாதியான அண்ணல், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர். கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளம் இட்டவர்.
அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழி நடப்போம். ஏற்றத் தாழ்வற்ற, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குத் துணை நிற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்; பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள, அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினோம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய சமத்துவமான சமுதாயம் அமைக்க உறுதியேற்றோம். மரியாதை செலுத்திய நிகழ்வில் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் உட்பட நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.