படகுகளுடன் பொதுமக்களை மீட்க சென்ற பா.ஜ.க. பெண் நிர்வாகியை தடுத்த விடியாத திமுக அரசு!

சென்னை, முடிச்சூரில் வெள்ளநீரில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக படகுகளுடன் சென்ற பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்யா சுந்தரை விடியாத திமுக அரசு தடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. விடியாத திமுக அரசு இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை மீட்காமல் போட்டோ ஷூட் மட்டுமே நடத்தி வருகிறது.

தண்ணீர் தேங்காத பகுதிகளுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு ஒரு பால் பாக்கெட்டை கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் அதனை தங்களது முகநூல் பக்கங்களில் பதிவிட்டு நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம் என்ற கட்டுக்கதை அளக்கின்றனர். 

இதனால் கொதித்து போன மக்கள் தங்களின் உயிர்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவைகளுக்காகவும் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். பலர் இன்னும் மழைநீர் வடியாமல் மொட்டை மாடியில் உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

அது போன்று பொதுமக்களை பாஜகவினர் தங்களது சொந்த பணத்தில் படகுகளை வரவழைத்து  மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை முடிச்சூரில் மழைநீரால் சிக்கியுள்ள மக்களை மீட்க படகுகளுடன் சென்ற பாஜக மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்யா சுந்தரை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. அப்போது அவர்களுடன் மீனாட்சி நித்யா சுந்தர் பல்வேறு  கேள்விகளை  எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களை மீட்க செல்வதை எதற்காக தடுக்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை. இது போன்று பல இடங்களில் பாஜகவினர் உதவி செய்வதை திமுக திட்டமிட்டு தடுத்து வருகிறது.

வாக்களித்த மக்களை காக்காமல் திமுக எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள் என பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் பாஜகவினர்  உதவி செய்யப் போனால் பெண்களாக இருந்தாலும்   இந்த விடியாத அரசு தடுக்கிறது. ஒருவருக்கு உதவுதை தடுக்கும் இது என்ன வக்கிர மனநிலை ?  ஒருவேளை மக்கள் பாஜகவை நோக்கி சென்று விடுவார்கள் என்ற அச்சமா என  பாதிக்கப்பட்ட மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top