மாட்டு மூத்திர மாநிலங்கள்.. தி.மு.க., எம்.பி. செந்தில் குமாரின் ஆணவப்பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மாட்டு மூத்திர ( கோமூத்ர )  மாநிலங்களில் வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க-வின் பலம் என்று திமுக எம்.பி., செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் ஆணவத்துடன் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட நாடு முழுவதும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பா.ஜ.க., காங்கிரஸிடம் இருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை கைப்பற்றியது 

தெலுங்குங்கானாவில் காங்கிரஸும், மிசோராமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றன. தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், வடமாநிலங்களில்  அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தி வருவதை இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த நிலையில், மாட்டு மூத்திர ( கோமூத்ர )  மாநிலங்களில் வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.,-வின் பலம் என்று மக்களவையில் தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் ஆணவத்துடன் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தனது  வலைத்தளப் பக்கத்தில், தி.மு.க-வின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதுபோலவே நாடாளுமன்றத்தில் அவர்களது எம்.பி-க்களின் பேச்சுக்களின் நிலையும் இருக்கிறது. நம் வட இந்திய நண்பர்களை பானிபூரி விற்பவர்கள், கழிவறை கட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்தவர்கள் அவர்கள். தற்போது இண்டி கூட்டணியில் இருக்கும்  தி.மு.க வின்  எம்.பி செந்தில்குமார், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களை கோமூத்தர மாநிலங்கள்  என்று விமர்சனம் செய்கிறார். தி.மு.க-வின் ஆணவமே அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று சாடியிருந்தார்.

பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் தரப்பிலும் செந்தில் குமார் பேச்சை ரசிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கோமூத்திர மாநிலங்கள் என மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கோமாதவை  நாங்கள் மதிக்கிறோம் என்று பதற்றத்தில் கூறினார். எங்கே மீண்டும் மக்கள் காங்கிரஸை முழுவதும் நிராகரித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் உடனடியாக காங்கிரஸ் கட்சியினர் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது.

மேலும் காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சுக்லா, மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் செந்தில் குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆனதை தொடர்ந்து, செந்தில்குமார் தனது எக்ஸ் பதிவில், முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஒரு படி மேலே சென்ற திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அகில இந்தியப் பிரச்னைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சொல்லியதற்கே 

மூன்று மாநிலங்களில் காங்கிரசி ஒழித்து கட்டி விட்டார்கள். இந்த நிலையில் வட மாநிலங்களையும்  ஹிந்து மதம் சார்ந்த அம்மக்கள்  நம்பிக்கையையும் வேண்டும் என்றே திமுக கொச்சைப்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகள் திமுகவை கண்டு அலறுகின்றன. இண்டி கூட்டணியில் விரைவில் திமுக தனிமைப்படுத்தப்படலாம்! அல்லது கூட்டணி உடையலாம் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top