விடியாத திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் சென்னையில் மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உணவு, அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். இதனை உணர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னைக்கு உதவும்படி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வகையில் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை ஒரு பெரிய லாரியில் அனுப்பி வைத்துள்ளார். இந்த பொருட்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
இதே போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாஜக நிர்வாகிகள் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை லாரிகள் மூலம் சென்னை கமலாலயத்திற்கு அனுப்பி வருகின்றனர். அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் வெளிமாநிலங்களை சேர்ந்த பாஜகவினரும் சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.