வடியாத மழைநீர்.. உதயநிதியை வெளுத்துவாங்கிய பெண்!

சென்னையில் தனது வீட்டின் அருகே கடந்த இரண்டு நாட்களாக வடியாத மழைநீரை எப்போது வெளியேற்ற போகிறீர்கள் என்று திமுக அமைச்சர் உதயநிதியை வறுத்தெடுத்துள்ளார் ஒரு பெண்மணி. இது பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர் வாராததால் தண்ணீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் முதல் தளங்களில் வசிப்பவர்களின் வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் விடியாத திமுக அரசு புயல் விட்டு இரண்டு நாட்களை கடந்த நிலையிலும் தண்ணீரை வடித்தெடுக்க இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் மின்சாரத்தையும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக அமைச்சர் உதயநிதி மழைநீர் இல்லாத பகுதிகளை பார்த்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் அவருக்கு  முன்கூட்டியே அங்கு சென்று வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் ஒரு பகுதிக்கு சென்ற உதயநிதியை அப்பகுதியை சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவர் கடுமையான வார்த்தைகளால் பேசினார். நான் மழை நீரால் பாதிக்கபட்டுள்ளேன். இன்றுவரை மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று தனது ஆத்திரத்தை கொட்டினார். அதற்கு பதில் சொல்லாமல் அமைச்சர்கள் சுப்பிரமணியம், கே.என்.நேரு ஆகியோர் பெண் ஆசிரியரை வெளியேற்ற திமுகவினருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. உதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண்ணையே பேச விடாமல் திமுகவினர் தடுத்து வருகின்றனர். இது போன்றுதான் மற்ற இடங்களிலும் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top