மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கையை சரியாக எடுக்காததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 400 டன் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளது.
மொத்தம் 226 ரேஷன் கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவற்றில் இருந்த, 333 டன் அரிசி, 19 டன் கோதுமை, 38 டன் சர்க்கரை, 4,000 லிட்டர் பாமாயில் ஆகியவை வீணாகியுள்ளன. அவை கடைகளில் இருந்து கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
திமுக அரசின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சேதம் ஏற்பட்டிருக்காது.
உணவுப் பொருட்களை கூட பாதுகாக்காமல் அலட்சியமாக எப்படி ஒரு அரசால் இருந்திருக்க முடியும் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. புயல் வரும் என்று கடந்த 15 நாட்களுக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் போட்டோ ஷூட்டிங்கில் ஆட்சியை நடத்தி விடலாம் என்று கனவு உலகில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் லட்சணம் மிக்ஜாம் புயல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.