சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4000 கோடி அல்ல எனவும் ரூ.5,166 கோடி எனவும் அந்த பணத்தில் இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக திமுக அமைச்சர் கே.என்.நேரு புது விளக்கம் அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்தது கனமழை. இதனால் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தொழிற்சாலைகள் அனைத்து இடங்களில் தேங்கி நின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதனால் ஒவ்வொரு மக்களும் திமுக அரசை பார்த்து கேள்வி எழுப்ப தொடங்கினர். ரூ.4,000 கோடியில் திட்டம் செயல்படுத்தின லட்சணம் இதுதானா? என்று பேசத்தொடங்கினர்.
இதனால் திமுக அரசு வசமாக சென்னை மக்களிடம் சிக்கிக்கொண்டு பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓடத்துவங்கினர்.
ரூ.4000 கோடிக்கு மழைநீர் வடிகால் அமைத்தும் இந்த துயர நிலை ஏற்பட்டது குறித்து பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4,000 ஆயிரம் கோடி அல்ல, ரூ.5,166 கோடி. அதில் இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என புதிய விளக்கம் அளித்துள்ளார்.
அப்படி என்றால் முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூறும்போது, ரூ.4,000 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தியதால்தான் சென்னை பாதிப்பில் இருந்து தப்பியது என்று சொல்லியது பொய்யா என்ற கேள்வி எழுகிறது.
இந்த லட்சணத்தில் தான் ஒவ்வொரு அமைச்சரும் 95 சதவிகிதம் வேலை முடிந்து விட்டது, 85 சதவிகிதம் என்று கதை அளந்தார்களா என்றும் கேள்வி கேட்கிறார்கள்…!