மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்தது கனமழை. ஆனால் அதிகமான பாதிப்பை சென்னை மக்கள் சந்தித்தனர். அதே போன்று புயல் மழையால் பாதிப்புக்கு உள்ளான பாஜக ஓபிசி அணி பொதுச் செயலாளர்
வீர திருநாவுக்கரசு தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த திங்கட்கிழமை ஒரே ஒருநாள் பெருமழை, புயல். அன்று காலையில் நிறுத்தப்பட்ட மின்சாரம்
இப்போதுதான் தரப்படுகிறது. கடந்த 5 நாட்களாக
தமிழக அரசு சார்பில் ஒருவர்கூட நேரில் வந்து பார்க்கவில்லை; எந்த உதவியும் செய்யவில்லை!
உயர்மட்ட அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக திடீரென இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் அரசு ஊழியர்கள் சிலர் வந்து சில நடவடிக்கைகள் எடுத்து, இப்போது (9.30 மணிக்கு) மின்சாரம் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். மற்ற பணிகள் இன்னும் செய்யப்படாமலே கிடக்கின்றன.
இதெல்லாம் ஏதோ குக்கிராமத்தில் நடந்த பிரச்சினை இல்லை. தமிழகத் தலைநகர் சென்னையில்! மு.க.ஸ்டாலின் தலைமையிலான
திமுக அரசு திறனற்ற அரசு மட்டுமல்ல, தமிழக மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத அரசு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்!
கடந்த 5 நாட்களாகப் பட்ட கஷ்டங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல!
இதுவரைக் கொள்கையளவில் திமுகவை எதிர்த்து வந்த நான், இனி தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இன்னுமின்னும் தீவிரமாக எதிர்க்க உறுதிப்பூண்டிருக்கிறேன்!
எங்கள் பகுதி மக்களைப் போல தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள மக்களும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படக் கூடாது. அப்படிப் பாதிக்கப்படக் கூடாது எனில், இந்தத் திறனற்ற திமுக ஒழிக்கப்பட வேண்டும்!
#மறக்கமாட்டோம்_மன்னிக்கமாட்டோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.