நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 13) நடந்த கூட்டத்தொடரின் போது பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர் மைய அரங்கில் குதித்து, வண்ண புகை குப்பி வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வண்ண புகை குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் நாட்டை அதிரவைத்தது. நிலையில் அந்த சம்பவத்தின் 22வது ஆண்டினை அனுசரிக்கும் இன்றைய நாளில் இப்படி ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்து உரிய அறிக்கை தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.