புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டரின் நுழைவு வாயில் முன்பாக கருணாநிதியின் சிலையை வைப்பதற்கு ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். அந்த வாயில் முன்பாக செல்ஃபி ஒன்றையும் எடுத்திருந்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது சிலை வைப்பதில் இருந்து திமுக பின்வாங்கியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக பாஜக எழுப்பிய கண்டனக் குரலை அடுத்து, சிலை வைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
தலைநகர் சென்னை, இன்னும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்லை.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பிறருக்கு உரிமையான இடத்தில் தங்கள் தலைவர்களின் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம். மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.