அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., : மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு!

சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவில் இணைந்திருப்பதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இன்று (டிசம்பர் 19) தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னாள் எம்.பி., மற்றும் வி.பி.துரைசாமி, நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருடன் கொண்டலாம்பட்டி அமமுக பகுதி கழக செயலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி, சூரமங்கலம் பகுதி அமமுக பகுதி கழக செயலாளர் கே.சுப்பிரமணியன், அம்மாபேட்டை அமமுக பகுதி கழக செயலாளர் கே.சரவணன், அமமுக மாணவரணி மாவட்ட இணை செயலாளர் பி.எஸ்.ஹரிஹரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளர் அமமுக வி.சந்திரன், அஸ்தம்பட்டி பகுதி அமுமுக கழகத் துணைச் செயலாளர் வின்சென்ட், எம்.முத்து, கொண்டலாம்பட்டி பகுதி அமமுக கழக துணை செயலாளர் கே.குமார், பி.ஏ.லட்சுமி காந்தன், ஏ.சங்கர், ஜி.வினோத் பாபு, வி.தினேஷ் பாலாஜி ஆகியோர் தங்களையும் தமிழக பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில செயலாளர் மதி பிரமிளா சம்பத், சேலம் மாநகர மாவட்ட தலைவர் பி.சுரேஷ்பாபு, கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெ.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பதிவிட்டுள்ளதாவது:

இன்றைய தினம், சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, வெங்கடாசலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்டுள்ள ஈர்ப்பால், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.இராமலிங்கம் முன்னாள் எம்.பி., மற்றும் கரு. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழக பாஜக செயல்பாடுகளில், அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும், பங்களிப்பையும் கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top