ஊழல் செய்துள்ள திமுக அமைச்சர்களுக்கு மட்டுமே சிறைகளில் தனி கட்டிடம் தேவைப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குற்றவாளி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (21.12.2023) தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று பொன்முடி. மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது.
ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.
திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.