பொன்முடி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை!

ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் சார்ந்த அரசியல் நடைபெற வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இன்று (டிசம்பர் 21) குற்றவாளி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள மாநில தலைவர் அண்ணாமலை;

பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தமிழகத்தின் அரசியல், பணம் சார்ந்து நடைபெறுகிறது. தமிழக அரசியல் தற்போது அதலபாதாளத்தில் உள்ளது. இந்த வழக்கு ஊழல் வழக்கு என்பதால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கிறார். இதைபோல், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு பரிசீலனை செய்தது.

ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும். மக்கள் சார்ந்த் அரசியல் நடைபெற வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும். என்னுடைய அரசியல் என்பது ஊழலை எதிர்த்து பண்ண கூடியது ஆகும். ஊழல் செய்த அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top